எஸ்.என்.எஸ் கல்லூரியில் வெளி ஆட்களை வர வைத்து சக மாணவர்கள் மீது தாக்குதல் !

published 7 months ago

எஸ்.என்.எஸ் கல்லூரியில் வெளி ஆட்களை வர வைத்து சக மாணவர்கள் மீது தாக்குதல் !

கோவை: கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வெளி ஆட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தப்பட்ட சமபவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, குரும்பபாளையத்தில எஸ்.என்.எஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரி அருகே உள்ள விடுதிகள், வீடுகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.என்.எஸ் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் அறையில் தங்கி இருக்கும் சக மாணவர்கள் சிலர் அதே கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன் பிரவீன் என்பவரின் செல்போனை பறித்தனர்.

இதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தீபக் என்ற மாணவர், அந்த கல்லூரியில் தொடர்பு இல்லாத வெளி ஆட்களை அழைத்துக்கொண்டு வெற்றிவேல் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி மிரட்டினர்.

இதனால் அச்சமடைந்த அவர்கள் அறைக்குள் ஓடிச் சென்று கதவை பூட்டி கொண்டனர். இதன் இடையே சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டது. இது குறித்து புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கு கல்லூரி மாணவர்களை தாக்கியது கோவை கொண்ட யம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சேர்ந்த பிரதீப், வரதரயங்கா பாளையம் ஜெர்மன் ராகேஷ், காபி கடை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், அன்னூர் கணேசபுரம் ராகுல், தீபக் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe