அலுவலக பணியாளர் வேலை: ரூ.25,000 வரை சம்பளம்... நேர்காணல் மட்டுமே!

published 7 months ago

அலுவலக பணியாளர் வேலை: ரூ.25,000 வரை சம்பளம்...  நேர்காணல் மட்டுமே!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அலுவலக பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  சென்னையில் செயல்பட்டு வரும்  கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 3 அலுவலக பணியாளர் (Office Staff) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஏதேனும் ஒரு துறையில் டிகிரிபெற்றிருக்க வேண்டும். MS Office, Tally with good communication Skills  ஆகிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அடிப்படை சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். ஜூலை 1 அன்று காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

நேர்காணல் நடைபெறும் இடம் : Besant Arundale Senior Secondary School, Kalakshetra Foundation, Chennai – 600 041.

இந்த பணியிடங்கள் தொடர்பான விவரங்களை காண அதிகாரப் பூர்வ அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe