தங்கலான் படத்தின் டிரெய்லர் எப்போது? அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்!

published 7 months ago

தங்கலான் படத்தின் டிரெய்லர் எப்போது? அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான  தங்கலான் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்  அப்டேட் தெரிவித்துள்ளார்.

தங்கலான் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.  படப்பிடிப்பு முடிந்து ஏற்கனவே பல மாதங்கள் ஆகிவிட்டன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்  வேகமாக நடைபெற்றது. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சில காரணங்களினால் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

Vikram | Vikram's Thangalaan with Pa Ranjith to release in January 2024 -  Telegraph India

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் எக்ஸ் பக்கத்தில்  படத்தின் டிரெய்லர் அப்டேட் பற்றி தகவல் தெரிவித்துள்ளார். தங்கலான் படத்தின் பின்னணி இசையமைப்பு பணி முடிவடைந்தது.  எனது பெஸ்ட்டை கொடுத்துள்ளேன்,  எப்படிப்பட்ட திரைப்படம் என்று சொல்ல வார்த்தை இல்லை.  விரைவில் அசத்தலான டிரைலர் வர உள்ளது வர உள்ளது என  பதிவிட்டுள்ளார்.

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?  வெளியான அப்டேட்!

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேதியில் படம் வெளியாகுமா என படக்குழு இன்னும் உறுதியான தகவலை அறிவிக்கவில்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe