கோவையில் இளநிலை தட்டச்சர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

published 7 months ago

கோவையில் இளநிலை தட்டச்சர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

கோவை: தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒப்பந்த அடிப்படையிலான இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் பணியிடத்திற்கு கீழ்கண்ட தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இப்பணிக்கான தகுதிகளாக

1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. கணினியில் Computer on Office Automation-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. கோயம்புத்தூர் மாவட்டத்தினைச் சார்ந்த 18 வயதிற்கு மேல் 37 வயதிற்குட்பட்ட ஆண்/ பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான நபர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள், கணினியில் Computer on Office Automation- தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் உரிய ஆவணங்கள் மற்றும் சுய விவரத்துடன் (Bio-Data)  15.07.2024க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி

மாவட்ட சமூகநல அலுவலர், 
மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண் 5,
பழையகட்டிடம் தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர்-18
(தொலைபேசிஎண்:  0422-2305126)

என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe