கிறிஸ்துவ ஆலயங்களை பழுது பார்க்க நிதியுதவி- கோவை மாவட்ட நிர்வாகம் தகவல்...

published 7 months ago

கிறிஸ்துவ ஆலயங்களை பழுது பார்க்க நிதியுதவி- கோவை மாவட்ட நிர்வாகம் தகவல்...

கோவை: தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17 ஆம் ஆண்டுமுதல் நிதி உதவிவழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிமேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியதொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ள பணிகளாக விசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிபெருக்கி, நற்கருணைபேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சொரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் மற்றும் பக்தர்களுக்கு தேவையான பெஞ்சுகள் மற்றும் தேவாலயத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல், சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகியவற்றிக்கு தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானியதொகையாக 10-15வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ. 10.00 இலட்சமாகவும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ4.00 இலட்சத்திலிருந்து ரூ.15.00 இலட்சமாகவும் மற்றும் 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.6.00 இலட்சத்திலிருந்து ரூ.20.00 இலட்சமாகவும் நிதி உதவி உயர்த்தப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களுடன் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு மூலம் கிறித்துவ தேவாலயங்களை எஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைப்படம் மற்றும் திட்டமதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வுசெய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவிவேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதிஉதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தகவலுக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலஅலுவலக தொலைபேசி எண்.0422-2300404 மற்றும் மின்னஞ்சல் [email protected]ஐ தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe