குரூப் 2 தேர்வுக்கு தயாராகுங்கள்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

published 7 months ago

குரூப் 2 தேர்வுக்கு தயாராகுங்கள்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக. துணை வணிக வரி அலுவலர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய தொகுதி II தேர்வுக்கு 507 காலிப் பணியிடங்களுக்கும் தணிக்கை ஆய்வாளர் உதவியாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய தொகுதி IIA தேர்வுக்கு 1820 காலிப் பணியிடங்களுக்கும் என மொத்தம் 2327 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது 14.09.2024 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்ற அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தில் SmartBoard இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, ஆகியன உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள், வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட்டு வருகிறது.

https://tamilnaducareerservices.tn.gov.in  செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளி). தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டினை எடுத்துகொண்டு கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் திற்கு நேரில் வருகை புரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அல்லது [email protected]
என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயனடையுமாறும் மாவட்ட
ஆட்சித்தலைவர்  கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe