கோவையில் இரத்தத்தை மாற்றி ஏற்றியதால் பெண் உயிரிழப்பு- குடும்பத்திற்கு 20 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு…

published 7 months ago

கோவையில் இரத்தத்தை மாற்றி ஏற்றியதால் பெண் உயிரிழப்பு- குடும்பத்திற்கு 20 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு…

கோவை:  கோவையில் மின்வாரிய உதவி பொறியாளராக பணிபுரிபவர் சாய்பிரேமன். இவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் தனது மனைவி ராஜலட்சுமி கடந்த 2018 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பேரூர் அருகே சென்று கொண்டு இருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் ரத்தம் ஏற்றினர். 

பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. இதை அடுத்து அவருக்கு ரத்தம் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அருண்குமார், ஆண்டனி ஆகியோரின் ஆலோசனைப்படி மருத்துவர் தமிழ்ச்செல்வன் அவர் மனைவிக்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் அவர் மனைவி ராஜலெட்சுமி உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

அவர் இதயம் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து பேரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் மனைவியின் உடல் பிரேத பரிசோதனை கோவை அரசு  மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் அவர் மனைவி ராஜலெட்சுமிக்கு ரத்தம் செலுத்திய போது அந்த ரத்தம் அவரது உடலுக்கு பொருந்தாத வேறு வகை ரத்தம் ஏற்றியதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிய வந்தது. 

எனவே தனியார் மருத்துவமனை அவர் மனைவியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த மனைவி கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மூன்று பேர் இணைந்து ராஜலட்சுமி கணவர் சாய்பிரேமனுக்கு ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe