கோவையில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்…

published 7 months ago

கோவையில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்…

கோவை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் இன்று கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது தமிழக அரசையும் மின்சார வாரியத்தையும் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


 

இது குறித்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாநகரத் தலைவர் மதுசூதனன் கூறியதாவது, 
"மின்சார வாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் கடுமையான வேலைப்பளுவுடனும் மன உளைச்சலுடனும் கீழ் மட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலால் தொடர் விபத்துகளும் மரணங்களும் ஏற்பட்டு வருகிறது. பலமுறை எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியும் இந்த அரசு செவி மடுக்காத காரணத்தால் தான் தமிழக முழுவதும் அலுவலகத்திற்குள்ளேயே காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த போராட்டத்திற்கு செவி சாய்த்து அரசு தீர்வு காணவில்லை என்றால் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கி இந்த அமைப்பு செல்லும்." என்று கூறினார்.
 

மேலும் "இதுகுறித்து மின்சார வாரிய தலைவரையும் அமைச்சர்களையும் சந்தித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நேற்று தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார், ஆனால் எங்கள் கோரிக்கைகள் எதற்கும் ஏற்புடைய பதில் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் சமரச முறிவு ஏற்பட்டு நாங்கள் இன்று களத்தில் இறங்கும் நிலை இந்த அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe