கோவை அருகே காட்டு யானைகளால் 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

published 7 months ago

கோவை அருகே காட்டு யானைகளால் 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

கோவை: கோவை   தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் பகுதியில் உள்ள செந்தில்குமார் என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக 5"க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அதே பகுதியில் முகாமிட்டு விவசாய நிலங்களுக்குள்  புகுந்து சேதப்படுத்தி வருவது தொடர் கதை ஆகிவிட்டது எனவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

காட்டு யானைகளை கண்காணித்து அடர் வனப் பகுதியில் விரட்ட வேண்டும் என வனத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe