நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டன்னிங் லுக்!

published 7 months ago

நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டன்னிங் லுக்!

நடிகை  காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த  2008ம் ஆண்டு நடிகர் பரத், குஷ்பு நடிப்பில் வெளியான 'பழனி'  திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 

 

தமிழ் சினிமாவில், விஜயுடன் துப்பாக்கி, கார்த்தியுடன் நான் மஹான் அல்ல, சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம், தனுசுடன் மாரி என  முக்கிய டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த காஜல், கடந்த 2020ம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்னர்  படவாய்ப்புகள் பெரிதா வரவில்லை. தற்போது தெலுங்கு, ஹிந்தியில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், போட்டோ ஷூட்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இன்ஸ்டாவில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe