ஓ.டி.டி.,யில் வெளியாகும் ‘ஆடுஜீவிதம்’... இதுதான் தேதி!

published 7 months ago

ஓ.டி.டி.,யில் வெளியாகும் ‘ஆடுஜீவிதம்’... இதுதான் தேதி!

பிரத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம் எப்போது   ஓ.டி.டி., தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்து பிளாக் பஸ்டர் ஆன படம் தான் the goat life - ஆடுஜீவிதம். எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படம்  உருவாக்கப்பட்டுள்ளது.

Aadujeevitham The Goat Life box office collection day 4: Prithviraj  Sukumaran film sees jump, crosses ₹30 crore in India - Hindustan Times

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆடுஜீவிதம் திரைப்படம் நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

இப்படத்தில் பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்திற்காக தன் உடலை வருத்தி கடின உழைப்பை பிரித்விராஜ் கொடுத்துள்ளார்.  

திரையரங்குகளில் வெளியாகி 5 மாதங்களுக்குப் பின்னர், படத்தின் ஓ.டி.டி., வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஆடுஜீவிதம் படம் வரும் ஜூலை 19ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி., தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe