GST யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேச்சு...

published 7 months ago

GST யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேச்சு...

கோவை: கோவை துடியலூர் அருகே
தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசும் போது,

30 மாவட்டங்களில் இந்த சங்கம் செயல்பட்டுவருகிறது. சுமார் 50 ஆயிரத்தித்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் 5 நாட்களில் 3 முறை வந்தார். அதற்காக இந்த சங்கத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நான் கண்டிபாக அரசியல் பேச வரவில்லை.உங்களது முக்கிய கோர்க்கையான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நிதி அமைச்சரிடம் நானே நேரடியாக பேசி குறைக்க ஏற்பாடு செய்கிறேன்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க கூடிய அனைத்தும் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.மத்திய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைப்பவைகளை உங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து தருகிறோம்.

உங்களுக்கு வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளை கூட நாங்கள் கூட நின்று உதவி செய்கிறோம்

வரும் காலத்தில் இந்த சங்கம் பெரிய அளவில் வளர வேண்டும்

வரும் காலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் கூட்டங்கள் ஹைடெக்காக நடத்தி உங்களுக்கு வேலை அதிகபடுத்த ஏற்பாடு செய்கிறோம். இரண்டாவதாக 
இந்த சங்கத்தில் இருப்பவர்கள்  தங்கள் உடலை வருத்திக் கொண்டு வேலை செய்கிறார்கள் அதனால் இங்கே இருக்கக்கூடிய குழந்தை செல்வங்கள் உங்களுடைய தந்தை தாய் படும் கஷ்டங்களுக்கு தீர்வ ஏற்பட நன்றாக படித்தும்,  நல்லவர்களாக வளர வேண்டும்.

நல்ல சமுதாயத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும், சுத்தமான காற்று இருக்க வேண்டும், எப்போது பாதுகாப்புக்கு  முழுமையாக இருக்க வேண்டும்

நீங்கள் அரசியல்வாதிகளுக்கு உயர்ந்த இலக்கு வைக்க வேண்டும். அதற்காக அந்த அரசியல்வாதிகள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அப்போது தான் சமுதாயம் மாறும். மூன்றாவது தகவலாக,
எந்த இடத்திலும் கூட லஞ்சம் கொடுப்பதை நீங்கள் எதிர்க்க வேண்டும்.

இளைஞர்கள் என்ன ஆனாலும் லஞ்சம் தர மாட்டேன் என்று உறுதி எடுத்து அதன்படி நடக்க வேண்டும். சவுத் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்து சென்றபோது உங்களுக்கு இதில் அனுமதியில்லை என்று டிக்கெட் பரிசோதகர் தெரிவித்துள்ளார் அப்போது டிக்கெட் பரிசோதகர் உடனடியாக காந்தியையும், அவருடைய உடமையையும் வெளியே தள்ளி விடுகிறார்.

நீங்கள் தனி மனிதராக நின்று லஞ்சத்தை முறியடிக்க முடியும். அதேபோல காமராஜர்  பெரிய அரசியல் மாற்றத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அதனால் நான் லஞ்சத்தை அறவே அகற்ற வேண்டும்.

தனிமனிதமாக போராடி காந்தியடிகள்,  காமராஜர் வெற்றி கண்டுள்ளார்.அதேபோல நாமும் வெற்றி பெற முடியும். நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.உங்களுக்கு மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம்.

உங்கள் கோரிக்கை எங்கள் காதுக்கு வந்தவுடன் அந்த கோரிக்கைகளை எங்களுக்கு கடமையாக மாறி வருகிறது.

நாங்களும் போராடி உங்கள் கோரிக்கைகளை வெற்றி பெற செய்கிறோம் என்று தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe