சென்னை உட்பட 13 நகரங்களில் 5G சேவை தொடக்கம்

published 2 years ago

சென்னை உட்பட 13 நகரங்களில் 5G சேவை தொடக்கம்

கோவை: 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். முதற் கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வருகிற செப்டம்பர் 29-ந்தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நடத்தும் தொடக்க விழாவில் 5ஜி நெட்வொர்க்கை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி வெளியீட்டு தேதியை மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் தொலைத் தொடர்பு இணை மந்திரி தேவசின் சவுகான் கூறும்போது, 5ஜி மொபைல் சேவைகள் சுமார் ஒரு மாத காலத்தில் நாட்டில் வெளியிடப்படும். இது அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் பல மடங்கு பங்கு வகிக்கும். 5ஜி தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது என்றார்.

முதற்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நரங்களில் 5ஜி சேவை வெளியிடப்படுகிறது. 5ஜி சேவையை பொறுத்த வரை 4ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe