இட்லி...சாம்பார்... கதையை மிஞ்சும் ஊழல்.. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு 'தீ'யில் எரிக்கப்படும் மக்கள் பணம்!

published 6 months ago

இட்லி...சாம்பார்... கதையை மிஞ்சும் ஊழல்.. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு 'தீ'யில் எரிக்கப்படும் மக்கள் பணம்!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தீப்பற்றியது. அதனை மூன்று மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு துறையினர் அணைத்தனர். தீயை அணைக்க சுமார் 11 நாட்கள் ஆனது.

இந்நிலையில் அந்த நாட்களில் சிற்றுண்டி செலவிற்கு மட்டும் 27 லட்சத்து  51 ஆயிரத்து 678 ரூபாய் செலவு செய்துள்ளதாக மாநகராட்சி ஒப்புதல்  தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 333 தீரமானங்கள் கொண்டுவரபட்டது.அதில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 6.04.2024  முதல் 17-04-2024 ஆம் தேதி வரை கட்டுகடங்காமல்  தீப்பற்றியதாகவும்
இந்த  தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து  மன்றத்தின் பார்வைக்காக  ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. அதில் மொத்தம் செலவு 76 லட்சத்து 70 ஆயிரத்து 318 காட்டப்பட்டுள்ளது.
அதில் உணவு ,மற்றும் டீ ,காபி,மற்றும் குளிர்பானங்கள் மற்றும் பழங்களுகள் வாங்கியதற்க்கு மட்டும் 27 லட்சத்து 51 ஆயிரத்து 678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கூறுகையில்,கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் , இதில் சமீபத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக கணக்கு காட்டியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe