மத்திய அரசு வேலை: சுருக்கெழுத்து தட்டச்சர் பணி... 2006 காலியிடங்கள் அறிவிப்பு!

published 6 months ago

மத்திய அரசு வேலை: சுருக்கெழுத்து தட்டச்சர் பணி... 2006 காலியிடங்கள் அறிவிப்பு!

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) சார்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer) Grade C & D பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 2006 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

12 ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சுருக்கெழுத்து தட்டச்சு திறன் பெற்றிக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு ’சி’ பணிக்கு ரூ. 9,300 – 34,800 சம்பளமும்,  சுருக்கெழுத்து தட்டச்சர்  கிரேடு ’டி’ பணிக்கு ரூ. 5,200 – 20,200 சம்பளமும் வழங்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு, திறனறித் தேர்வு (சுருக்கெழுத்து தட்டச்சு திறன்) மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பிக்க கடைசி தேதி  17.08.2024 ஆகும்.

இந்த பணியிடங்கள் தொடர்பான  மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://ssc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe