இரிடியம் மோசடியில் ஈடுப்பட்ட கணவன் மனைவியை கைது செய்த கோவை காவல்துறை...

published 6 months ago

இரிடியம் மோசடியில் ஈடுப்பட்ட கணவன் மனைவியை கைது செய்த கோவை காவல்துறை...

கோவை: வெளிநாட்டிற்கு இரிடியத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை கோவை மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை எண்ணூரைச் சேர்ந்த சீனிவாசன். இவருக்கு அவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். 

சியாம்(எ) ஜாய் மோகன்
மற்றும் அவரது மனைவியான சஜிதா ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக் கணக்கில் லாபம் பெறலாம் என சீனிவாசனை நம்ப வைத்து. இரிடியத்தை சோதனை செய்வதற்காக அறிவியல் நுட்பம் தெரிந்த Y.G.சேகர் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்து அதனை சோதனை செய்ய சீனிவாசனிடம் இருந்து 10 லட்சங்களை மூவரும் பெற்று உள்ளனர். 

பின்னர் சியாம் (எ) ஜாய் மோகன் மூலம் வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதாக அறிமுகமான வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர்கள் சோதனை செய்யப்பட்ட இருடியத்தை உண்மையானது என்றும், அதனை வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் பல கோடி மதிப்பில் விற்றுக் கொடுப்பதாக கூறி அதற்கு முன் பணமாக சீனிவாசனிடம் இருந்து மேலும் ரூபாய் 15 லட்சம் பணம் பெற்று உள்ளனர். 

பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் வராமல் இருக்கவே சந்தேகம் அடைந்த சீனிவாசன் விசாரித்துப் பார்த்ததில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளார்.  இது தொடர்பாக சீனிவாசன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி வழக்கின் குற்றவாளிகளான கேரள மாநிலத்தை சேர்ந்த குமரேசன் நாடார் மகன் சியாம் (எ) ஜாய் மோகன் (44) மற்றும் அவரது மனைவியான சஜிதா (38) ஆகியோர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மேற்படி வழக்கின் சொத்துக்களான இரிடியம், பணம் ரொக்கம் ரூ.4,99,000 மற்றும் தங்க நகைகள் சுமார் 77 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe