அமேசான் நிறுவனத்தில் வேலை : சென்னையில் பணி... உடனே விண்ணப்பிங்க!

published 6 months ago

அமேசான் நிறுவனத்தில் வேலை : சென்னையில் பணி... உடனே விண்ணப்பிங்க!

பிரபல அமேசான் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில் சென்னை அலுவலகத்தில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

அதன்படி, அமேசான் நிறுவனத்தில்  ML Data Associate I பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள்  ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில்  பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  (தகுதி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அமேசான் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி, திறமையை பொறுத்து சம்பளம்  நிர்ணயம் செய்யப்படும்.

எந்த வகையான ஷிப்ட் பணிகளிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். வார இறுதி நாட்கள், இரவு பணி, பொது விடுமுறை நாட்களிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பம் செய்ய கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.  பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe