கோவை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து பயிற்சியாளராக வாய்ப்பு...

published 6 months ago

கோவை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து பயிற்சியாளராக வாய்ப்பு...

கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்கநிலை கால்பந்து பயிற்சிக்கான SDAT விளையாடு இந்தியா மாவட்ட மையம் கோயம்புத்தூர் மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் செயல்பட்டுவருகிறது. இம்மையத்தில் 50-100 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில்
சாதனைபடைத்த 40 வயதுக்குட்ட கால்பந்து வீரர் வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேனா போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.25000 வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகையோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோயம்புத்தூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். 13.08.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு கோயம்புத்தூர் மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் 14.08.2024 நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன். பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe