கோவை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கதை சொல்லும் கலை மற்றும் அறிவியல்- (The art and science of Story Telling) பயிற்சியினை முடித்த மாணவ மாணவியர்களுக்கான திறன்களை வெளிபடுத்தும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், அரசுகலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 'கதை சொல்லும் கலை மற்றும் அறிவியல்' (The art and science of Story Telling) பயிற்சியினை முடித்த மாணவ மாணவியர்களுக்கான திறன்களை வெளிபடுத்தும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அரசு கலைக் கல்லூரி முதல்வர் எழிலி, நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அரசு கலைக் கல்லூரி கார்த்திகேயன், அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ் தமிழ் துறை தலைவர் முனைவர் பூங்கொடி, ஆங்கில துறை தலைவர் முனைவர் கௌரிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நான் முதல்வன் திட்டம். அரசுப்பள்ளிகளில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை 100 சதவீதம் உறுதிசெய்யும் பொருட்டு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர உதவும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இத்திட்டம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான, பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) கணிசமான அதிகரிப்பைக் காண முடிகிறது.
அதனடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் 5வது செமஸ்டர் மாணவர்களுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்பட்ட கதை சொல்லும் கலை மற்றும் அறிவியல் என்பது சிறந்த திறன் பயிற்சியாகும். அரசு கலைக்கல்லூரியில் இப்பயிற்சியினை முடித்த மாணவ மாணவியர்களுக்கான திறன்களை வெளிபடுத்தும் கண்காட்சி இன்று நடைபெற்றது.
இக்கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பொம்மலாட்டம், நிழல் பொம்மலாட்டம், இசை மற்றும் கதைசொல்லல், வணிகக் கதைகள் மற்றும் கதை சொல்லும் உத்திகள் போன்ற கதை சொல்லும் திறன்கள் தொடர்பான தனித்துவமான திறன்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தபட்டிருந்தன. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை திறமையாக வெளிப்படுத்தும், ஆற்றல் மிக்கவர்களாக விளங்குவார்கள்.
மேலும், அரசு கலைக் கல்லூரியில், தமிழ் துறை மற்றும் ஆங்கிலத்துறை மாணவர்கள் சார்பில் அமைக்கப்பட்டியிருந்த கண்காட்சியில் பொம்மலாட்டம் வாயிலாகவும், வணக்கம் கோயம்புத்தூர், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பற்றி தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களை கதை வடிவிலும் கலை நயத்துடன் வடிவமைத்து படைத்திருந்தார்கள். இப்பயிற்சியின் மாணவர்கள் கதை சொல்லும் விதத்தில் தங்களது ஆர்வம் மற்றும் திறன்களை ஆரம்ப நிலையிலேயே புரிந்துகொள்ளவும். தங்களது திறன்களை மேமம்படுத்தவும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும். மேலும், தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன்களை மேம்படுத்தவும். கல்லூரியில் இறுதியாண்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, எளிதாக வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!