உங்கள் வீட்டில் கழிவறை கட்ட வேண்டுமா? : கோவை மாநகராட்சி அழைப்பு

published 2 years ago

உங்கள் வீட்டில் கழிவறை கட்ட வேண்டுமா? : கோவை மாநகராட்சி அழைப்பு

கோவை: கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் சி.எஸ்.ஆர் நிதியில் தனிநபர் கழிப்பிடம் திட்டத்தை செயல்படுத்த தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகரில் தனிநபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்காக, பயனாளிகளின் பங்களிப்பை அளிப்பதற்கு வங்கிகள், நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், நல்வாழ்வு சங்கங்கள் ஆகியோர் தங்களின் சமூக பொறுப்பு நிதி பங்களிப்பை (சிஎஸ்ஆர்) அளித்து திட்டத்தை செயல்படுத்தலாம்.

அவர்கள், கிழக்கு மண்டலத்தில் டி.முத்துராமலிங்கம் (94437 99207), மேற்கு மண்டலம் எம்.சேகர் (9489206055), வடக்கு மண்டலம் ஆர்.மோகனசுந்தரி (9489206045), தெற்கு மண்டலம் என்.அண்ணாதுரை (9443799212), மத்திய மண்டலம் ஏ.சங்கர் (9443799236) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களையும் மாநகராட்சி நிர்வாகம் வரவேற்கிறது.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் தங்களின் விண்ணப்பங்களை வழங்கலாம் என்று ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe