டெல்லியில் இருந்து பயிற்சிக்காக கோவை வந்துள்ள CRPF வீரர்கள்...

published 6 months ago

டெல்லியில் இருந்து பயிற்சிக்காக கோவை வந்துள்ள CRPF வீரர்கள்...

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலை பகுதியில் இருந்து 300 சிஆர்பிஎப் பயிற்சி அதிகாரிகள், 15 குழுக்களாக பிரிந்து இன்று அடர்ந்த காடுகளில் 7 நாட்கள்  தங்கி காடுகள் பற்றிய பயிற்சிகளை மேற்கொண்டனர்.

 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இன்று முகாமிட்ட சிஆர்பிஎப் பயிற்சி அதிகாரிகள் சுமார் 300 பேர் அடர்ந்த வன பகுதியில்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இருந்து பல்வேறு பயிற்சிகளுக்காக கோவைக்கு வந்துள்ள சிஆர்பிஎப் வீரர்கள் 45 நாட்கள் கோவை ராக்கி பாளையம் பகுதியில் உள்ள இரானுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். 

45 நாட்கள் பயிற்சி நிறைவு பெற்ற நிலையில் இன்று இவர்கள் 300 பேரும், சுமார் 15 குழுக்களாக, பிரிந்து  பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலை அடர்ந்த வன பகுதியில் தற்காலிக   கொட்டகை எனும் டென்ட்  அமைத்து வனப்பகுதிகளில் தங்க உள்ளனர்.

வனப்பகுதியில் உள்ள காடுகளில் எந்த வித அடிப்படை வசதிகளின்றி, அங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு உயிர் வாழ்வது எப்படி? காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள், நக்சலைட்களை கண்காணிப்பது எவ்வாறு? காடுகளில் எவ்வாறு உயிர் பிழைப்பது, மனித நடமாட்டம், விலங்குகள் நடமாட்டம் பற்றி அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்றிகள் இவர்களுக்கு இங்கு அளிக்க பட உள்ளது. 

7 நாட்கள் காடுகளில் வாழ இவர்களுக்கு அடிப்படை தேவைகள் மட்டும் வழங்கபட்டது இதனை தொடர்ந்து அனைவரும் காடுகளுக்குள் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

 தலைமை
உதவி ஆணையர், கமாண்டர் ஏகே அனாஸ் தலைமையில் இந்த பயிற்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe