உக்கடம் அடுக்குமாடி குடியிருப்புக்கு மத்தியில் ஹைபர் பார்க்...

published 6 months ago

உக்கடம் அடுக்குமாடி குடியிருப்புக்கு மத்தியில் ஹைபர் பார்க்...

கோவை: உக்கடம் புல்லுக்காடு குடியிருப்புக்கு மத்தியில்  ஹைப்பர் பார்க் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

 

கோவை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கோவை விழா  ஒத்துழைப்புடன் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஸ்டார்ட் இந்தியா, ஏசியன் பெயிண்ட் சார்பில் Hyper Park ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.  

இவ்விழாவில் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியான ஓவிய சந்தை(Art Street) நடைபெறும் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளும் அறிவிக்கப்பட்டது. இந்த ஓவிய சந்தையானது  ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கலை மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த ஓவிய சந்தையில் ஆர்வமுள்ள கலைஞர்கள் மற்றும் கலை கல்வியாளர்கள் https://Coimbatorevizha.theticket9.com/
என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது +91 96005 14888 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe