கீரணத்தம் அரசு பள்ளியில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேர்தல்...

published 5 months ago

கீரணத்தம் அரசு பள்ளியில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேர்தல்...

கோவை: கீரணத்தனம் அரசு நடுநிலை பள்ளியில், தேர்தலின் முக்கியத்துவம்  மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் வாக்களிக்கும் இயந்திரத்தில் மாதிரி வாக்களிக்கும் செய்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

கீரணத்தனம் அரசு நடுநிலை பள்ளியில், தேர்தல் மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் வாக்களிக்கும் இயந்திரத்தில் மாதிரி வாக்களிக்கும் செய்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடையே வலுவான வாக்களிக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், முழு வாக்குப்பதிவு செயல்முறை குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் (RAAC) கோவை கீரணத்தத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் மாணவர் பாராளுமன்ற மாதிரி தேர்தலை நடத்தியது.

பள்ளியின் பயிலும் 30 மாணவர்கள்  போட்டியிட்டனர்; 5 முதல்வர் பதவிக்கு மற்றவர்கள் பல்வேறு கேபினட் அமைச்சர் பதவிக்கு  பட்டியிட்டனர். தேர்தலில் 241 மாணவர்கள் வாக்களித்துள்ளனர்.
உண்மையான தேர்தல் எப்படி நடக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இந்த செயல்முறை நடத்தப்பட்டது. வாக்குச் சாவடி உருவாக்கப்பட்டு 4 வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். 

இந்தத் தேர்தலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், கோவையில் மாணவர் பாராளுமன்ற மாதிரி தேர்தலில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படும் வாக்களிக்கும் இயந்திரம் EVM இவிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.பாஷ் இன் தன்னார்வலர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை பள்ளியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சந்தித்து பள்ளியில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.

பாஷ் ஜெர்மனியை தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமானது கடந்த 1.5 வருடங்களாக அதன் CSR நிதி மூலம் இந்தப் பள்ளிக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்து வருகிறது. இது பள்ளியில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் லட்சியத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன், கடந்த தேர்தலுக்கு முன்பு RAAC பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் (RAAC) அமைப்பின்  செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

வாக்களிப்பது தங்களின் உரிமை, ஒவ்வொரு தேர்தலிலும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளிடையே விதைக்க, பள்ளிகளில் தேர்தல் நடத்தக்கூடிய EVM தயாரிப்பதற்கு எங்களுக்கு ஆதரவளிக்க பாஷ் நிறுவனத்தை அணுகினோம். இது போன்ற தேர்தல்களின் மூலம், குழந்தைகள் வாக்களிப்பது அவர்களுக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் பாராளுமன்ற மாதிரி தேர்தலை நடத்தினால், வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம், என்றார்.
 

இந்த நிகழ்வு எதிர்காலத்திற்கான சிறந்த அடித்தளமாகும், மேலும் தேர்தல்களில் பங்கேற்று அவற்றில் போட்டியிடும் இந்த நடைமுறையானது நீங்கள் தலைவர்களாகவும், உங்களிடையே உள்ள மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யவும் உதவும் என்று கோவை பாஷ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஆனந்த் வெங்கடேசன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பி.கே. கோவிந்தன், வருவாய்க் கோட்ட அலுவலர், கோவை (வடக்கு) வருவாய்க் கோட்டம்; பழனிசாமி, தலைவர், கீரணத்தம் ஊராட்சி; இம்மானுவேல் அல்போன்ஸ்  , சமுதாய பொறுப்பு அதிகாரி  கோவை பாஷ் , ஜெபலன்சி, முதல்வர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீரணத்தம், கோவை ஆகியோர் கலந்துகொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe