இரண்டு மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி- கோவையில் தலைமை பொது மேலாளர் பேட்டி…

published 5 months ago

இரண்டு மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி- கோவையில் தலைமை பொது மேலாளர் பேட்டி…

கோவை: பிஎஸ்என்எல் சார்பில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் Banavathu venkateshwaralu, கோவை மாவட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கோவை மாவட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சங்கர் கூறுகையில், "தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படும். கோவையைப் பொறுத்தவரை, ஆனைகட்டி பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களுக்கு நேரடியாக 4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் மொத்தம் எட்டு பகுதிகளில் 4ஜி சேவை வழங்கப்பட உள்ளது.  இரண்டு மாதத்திற்குள் நான்கரை லட்சம் பயனர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்துள்ளனர். இரண்டு லட்சம் பயனர்கள் வேறு தகவல் தொடர்பு நிறுவனங்களிலிருந்து பிஎஸ்என்எல்க்கு மாறியுள்ளனர். பிஎஸ்என்எல்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது." என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பிஎஸ்என்எல் பைபர் டூ ஹோம் இணைப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் 45 ஆயிரம் இணைப்புகள் இயக்கத்தில் உள்ளது. பிஎஸ்என்எல் பைபர் டூ ஹோம் இணைப்புகளை அடுத்த ஓராண்டுக்குள் இரட்டிப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் உள்ள 30,296 அரசு பள்ளிகளுக்கு பிஎஸ்என்எல் பைபர் டூ ஹோம் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 21,659 பள்ளிகளுக்கு பைபர் டூ ஹோம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 1271 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 400 இணைப்புகள் மட்டுமே கோவையில் மீதமுள்ளது." என்றார்.

"இன்னும் இரண்டு மாத காலத்தில், எங்களது பார்ட்னர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவும் வகையில் 24/7 இயங்கும் வகையில் திருச்சியில் மிகப்பெரிய மையத்தை கொண்டுவர உள்ளோம்." என்றார்.

தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் Banavathu venkateshwaralu கூறுகையில், "பிஎஸ்என்எல் மொபைல் டாரிப் தொகையை உயர்த்தப் போவதில்லை. பயனர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்அப் சேட் பாட் பயன்பாட்டில் உள்ளது. ஒரு பயனர் ஒன்பது பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வரை பெற்றுக் கொள்ளலாம்." என்றார்.

"இன்னும் இரண்டு மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அமல்படுத்த உள்ளோம். இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவை கொண்டு வரப்படும். தற்போது 10எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்கான அனைத்து உபகரணங்களும் TCS உள்ளிட்ட இந்திய தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது." என்றார்.

"சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு மட்டுமே டேட்டாக்களை பெறும் உரிமை உள்ளது. அவர்களது அனுமதி இல்லாமல்  பயனர்களின் டேட்டாக்களை யாரும் பெற முடியாது.  பயனர்களின் டேட்டாக்களுக்கு 100% பாதுகாப்பு அளிக்கப்படும். என்று  கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe