பாலியல் குற்றங்கள்; கோவையில் மண மேடையில் விழிப்புணர்வு செய்த ஜோடி!

published 5 months ago

பாலியல் குற்றங்கள்; கோவையில் மண மேடையில் விழிப்புணர்வு செய்த ஜோடி!

கோவை: கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதை பழக்கம் ஆகியவற்றிக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமண தம்பதிகளின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது...

 

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் அர்ஷத்- ஃபஹீமா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 
இதில் மணமக்களும் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்களும் "Say No To Drugs", "Hang the Rapist", "Republic? Or Rape Public?" என்ற பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
 

தற்பொழுது அந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe