கோவையில் தலை சிறந்த அணிகள் மோதிய LKN கிரிக்கெட் போட்டி!

published 5 months ago

கோவையில் தலை சிறந்த அணிகள் மோதிய LKN கிரிக்கெட் போட்டி!

கோவை: லட்சுமி கிருஷ்ணா ஹேப்பி ஹேன்ட்ஸ் சார்பில் எல்.கே.என் டிராஃபி 24 கிரிக்கெட் போட்டியில் கோவையில் நடைபெற்றது.

விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த, ஆரோக்கியத்தை வலியுறுத்த மற்றும் உடற்தகுதியை மேம்படுத்த லட்சுமி கிருஷ்ணா ஹேப்பி ஹேன்ட்ஸ் சார்பாக எல்.கே.என் டிராஃபி மாபெரும் கிரிக்கெட் போட்டி கோவை ஏட்7 அரினாவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ் நிர்வாக இயக்குனர். மற்றும் லட்சுமி கிருஷ்ணா ஹேப்பி ஹேன்ஸ் தலைவர் மோகன் தலைமையேற்று நடத்தினார்.

இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், காசோலைகளும் ரூபாய். 10,000 வழங்கினார்.

இந்த நிகழ்வில் லட்சுமி கிருஷ்ணா ஹேப்பி ஹேன்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர். இஹ்வான் ஷெரீப், லட்சுமி கிருஷ்ணா மேனேஜர். நியாஸ், சங்கீதா, தமிழ், ஷாருக் மற்றும் எல் கே என் குழுமம் கலந்து கொண்டது.

மேலும், பங்கு பெற்ற 8 அணிகளின் தலைவர்களுக்கு கேடயம் வழங்கி, ஆட்ட நாயகன் விருது உட்பட 10 சிறப்பு தனிப்பட்ட பரிசுகளும், 3 சிறப்பு விருந்தினர் கேடயமும் வழங்கப்பட்டன.

இந்த கிரிக்கெட் போட்டியில் கோவையில் உள்ள தலை சிறந்த 8 அணிகள் பங்குபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe