நூலக பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

published 5 months ago

நூலக பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

கோவை: 2024-25 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வீடு தோறும் நூலகங்கள் அமைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இவ்வாறு சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கும் அரசின் நோக்கம் அனைத்து தரப்புமக்களுக்கும் சென்றடைவதோடு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க முன்வருவார்கள் என்பதன் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீடுதோறும் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்த சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தினை தேர்ந்தெடுத்து, சொந்த நூலகங்களுக்கு ரூ.3000/- மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கள் இல்லத்தில் நூலகம் அமைத்து பராமரித்துவரும் புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரியநூல்கள் ஏதாவது இருப்பின் அதன்விபரம், எந்தஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் மற்றும் தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண்ணுடன் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்டநூலக அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி;

மாவட்ட நூலக அலுவலர், 1232, பெரியகடைவீதி, கோயம்புத்தூர் 641001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம். மேலும் [email protected] என்ற மின்ஞ்சல் முகவரியிலோ அல்லது அருகாமையில் உள்ள பொதுநூலக இயக்கக நூலகத்தில் நேரில் தங்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe