Breaking news கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர்கள் கைது!

published 5 months ago

Breaking news கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர்கள் கைது!

கோவை: கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம், கல்லூரியில் தற்காலிக பேராசிரியர் பணியில் இருக்கும், சதீஸ்குமார் (39), முரளி ராஜ் (33), ராஜ பாண்டி, லேப் டெக்னீசியன் அன்பரசு (37) ஆகியோர் தொல்லை அத்துமீறியதாக புகார் எழுந்தது.

தங்களிடம் அத்துமீறுவதாக 6 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். கல்லூரியில் கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், தவறாக மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது. தொடர்ந்து 4 பேர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe