விபச்சார வழக்கில் போலிசாரிடமிருந்து தப்ப முயன்று காலை முறித்து கொண்ட வாலிபர்...

published 1 week ago

விபச்சார வழக்கில் போலிசாரிடமிருந்து தப்ப முயன்று காலை முறித்து கொண்ட வாலிபர்...

கோவை: கோவை பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் 4 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து மீட்ட பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். 
 

இந்த நிலையில் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் அவரது நண்பர் சிக்கந்தர் பாஷா ஆகியோர் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. காரில் பெண்களை அழைத்துச் செல்வது போன்ற வேலைகளை ஸ்டீபன் ராஜ் செய்து வந்துள்ளார். 
இந்த நிலையில்  ஸ்டீபன் ராஜ்  2 பெண்களை காரில் அழைத்துக் கொண்டு காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு விடச் சென்றார். அப்போது  அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. 
 

அதில் பேசிய நபர் அழகிகளுடன் உல்லாசத்திற்கு வந்த வாலிபர் ரூ 2000 பணம் தருவதாக கூறிவிட்டு ஏமாற்றுவதாக பேசியுள்ளார். இதைக்கேட்ட ஸ்டீபன் ராஜ், உடனே அங்கு சிக்கந்தர் பாஷாவை அழைத்துக் கொண்டு வருவதாக கூறியுள்ளார். 
அவர்கள் இருவரும் காரில் அங்கு வந்தபோது அந்த வாலிபர் போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கு வந்துள்ளார். 

இதை பார்த்ததும் ஸ்டீபன் ராஜம் சிக்கந்தர் பாஷாவும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரில் அங்கிருந்து தப்பியுள்ளனர். 
போலீசாரும் அவர்களை விடாமல் துரத்தினர். அங்குள்ள சுடுகாடு அருகே சென்றபோது காரில் இருந்த பெட்ரோல் தீர்ந்துவிட்டது. இதனால் ஸ்டீபன் ராஜும் சிக்கந்தர் பாஷாவும் அதிர்ச்சி அடைந்தனர். கையில் காசு இல்லாததால் அந்த வழியாக சென்ற நபரை மிரட்டி அவரிடமிருந்து பணத்தை பறித்தனர். 
 

பிறகு அந்த பணத்தில் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு, குடித்துள்ளனர்.
அதன்பிறகு போலீசார் அவர்களை துரத்தி வருவதை பார்த்ததும் அங்கிருந்து மீண்டும் சென்றனர். பிறகு சிக்கந்தர் பாஷாவை மட்டும் ஸ்டீபன் ராஜ் காந்திபுரம் பகுதியில் இறக்கிவிட்டு மீண்டும் சரவணம்பட்டி வழியாக தப்பிச்செல்ல முயன்றுள்ளார். 
அப்போது போலீசார்   அவரை துரத்தினர். 
இதனால் பயந்து போன ஸ்டீபன் ராஜ் கணபதி டெக்ஸ்டைல் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தப்ப முற்பட்டார். இதனால் அவரது கால் எலும்பு முறிந்தது. வலியால் பிடித்த அவரை போலீசார் மடக்கினர். 

பிறகு அவரை போலீஸ் வேனில் ஏற்றி அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே தப்பி ஓடிய சிக்கந்தர் பாஷாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe