காலை இழந்த நபர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சி...

published 5 months ago

காலை இழந்த நபர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சி...

கோவை: திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சுஸ்லான் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியில் இருந்த பொழுது கிரேன் மூலம் கிரனைட் கற்கள் தூக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. 

அப்போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய அளவிலான கிரானைட் கற்கள் இவருடைய காலில் விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த இவரை கம்பெனி நிர்வாகத்தினர் ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவருடைய இடது கால் முற்றிலும் அணுகு தொடங்கியது அதனைத் தொடர்ந்து இடது கால் அகற்றப்பட்டது இந்த நிலையில் இடது காலை அகற்ற வேண்டும் என்றால் 50 ரூபாய் பத்திரத்தில் வெற்று கையெழுத்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கம்பெனி நிர்வாகம் கேட்டுக் கொண்டது வேறு வழியில்லாமல் நாகராஜன் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.


இந்த நிலையில் நாகராஜ் தனக்கு இழப்பீடு வழங்க கோரி கம்பெனி நிர்வாகத்திடம் பலமுறை தொடர்பு கொண்டு அவர்கள் எந்தவித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் துறை அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முதலமைச்சரின் தனிப்பிரிவு என பலமுறை மனு அளித்து உள்ளார். இந்த நிலையில் அதற்கும் எந்த தீர்வும் காணப்படாததால் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நாகராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதாக தெரிவித்தார் இந்த நிலையில் திடீரென அவர் தண்ணீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்கும் என்றார் இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக கோவை பந்தைய சாலை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்


இந்த நிலையில் அவர் தனக்கு உரிய நீதி வேண்டும் தனக்கான இழப்பீடு கிடைக்க வேண்டும் இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டேன் இரவு ஆனாலும் இங்கேயே இருந்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe