ஓணம் பண்டிகை- சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு…

published 5 months ago

ஓணம் பண்டிகை- சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு…

கோவை: மலையாள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடபடும். 

ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். சங்ககால கணிப்புபடி கடவுள் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்த நாளாகவும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் வந்து தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடினர். மலையாள மக்களின் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர்.மேலும் கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே பூகோலம் போடப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அதுமட்டுமில்லாமல் மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் பூ கோலமிட்டும் சாமி தரிசனம் செய்து பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்..

மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe