க்ரீம் பன்னுடன் போராட்டம் மேற்கொண்ட கோவை இந்தியா கூட்டணியினர்...

published 3 days ago

க்ரீம் பன்னுடன் போராட்டம் மேற்கொண்ட கோவை இந்தியா கூட்டணியினர்...

கோவை: கோவையில் நடைபெற்ற ஜிஎஸ்டி சம்பந்தமான கலந்தாய்வு கூட்டத்தின் போது GST குறித்து கருத்து தெரிவித்த கோவையை சேர்ந்த தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசனை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் பெருமளவு பேசப்பட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் சிவானந்தா காலனி பகுதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு சிலர் க்ரீம் பன் மாலையை அணிந்தும் கைகளில் க்ரீம் பன் உடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழில் முனைவோர் உடனான ஜிஎஸ்டி கருத்து கேட்பு கூட்டத்தில் ஜிஎஸ்டியில் உள்ள குளறுபடிகளை எதார்த்தமாக எடுத்து சொன்னார் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன். ஆனால் அவரை தனியாக அழைத்து அவரை மிரட்டி அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இது கோவை மக்களையும் தொழில் முனைவோரையும் அவமானப்படுத்தியதாக தெரிகிறது. 

பாசிச மதவெறி பிடித்த பாஜகவின் ஒன்றிய நிதி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் வந்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசையும் அமைச்சரையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.  நாங்கள் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கோவையில் இருக்கக்கூடிய தொழில் முனைவோர்களை அவமானப்படுத்துவதற்காக குறிப்பாக கோவை மக்களை அவமானப்படுத்தியதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe