கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்.பி.வேலுமணி...

published 5 months ago

கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்.பி.வேலுமணி...

கோவை; கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியை சேர்ந்த  தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டு இருந்த யானை தீடீரென தேவராஜை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, இன்று உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை நேரில் சப்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிதி உதவியையும் வழங்கினார்.

அதேபோல் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியை சேர்ந்த  கார்த்திக் 24 வயது இளைஞர் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இனைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென யானை கார்த்திக்கை தாக்க துவங்கியது. இதில் படுகாய மடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி சம்பவ பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில், மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியையும் வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe