கோவையில் வள்ளி கும்மி நடனம் ஆடிய எஸ்.பி.வேலுமணி...

published 5 months ago

கோவையில் வள்ளி கும்மி நடனம் ஆடிய எஸ்.பி.வேலுமணி...

கோவை: கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தில் தமிழ் மண் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட அறக்கட்டளை குழுவினரின் 151,152,153 வது முப்பெரும் அரங்கேற்ற நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடி துவக்கி வைத்தார்.

தொண்டாமுத்தூர் , தென்னமநல்லூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கரிய காளியம்மன் திருக்கோவில் திருமண மண்டப மைதானத்தில், தென்கயிலை ஈசன் கலை பண்பாட்டு மையம் சார்பாக, தமிழ் மண் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் 151, 152 மற்றும் 153 - வது முப்பெரும் அரங்கேற்ற விழா நடைபெற்றது. 

இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நடனமாடி அரங்கேற்றத்தை துவக்கி வைத்தார். 

இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டு பாரம்பரிய நடனம் ஆடியது பலரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் கலைஞர்கள் அனைவரையும் எஸ்.பி.வேலுமணி வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=5iCjjbm8AOc

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe