நரசிபுரத்தில் குட்டிகளுடன் புகுந்த யானைகள்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 4 months ago

நரசிபுரத்தில் குட்டிகளுடன் புகுந்த யானைகள்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை, பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி,  தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. 

இதை தொடர்ந்து நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் 7 - க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் நேற்று முகாமிட்டு இருந்தது.

உடனடியாக இதுகுறித்து வனத் துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் அங்கு முகாமிட்டு இருந்த யானை கூட்டத்தை விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விடாமல் கண்காணித்து வந்தனர். பின்னர் அடர்ந்த வனப் பகுதிக்குள் யானை கூட்டத்தை விரட்டினர்.

யானைக் கூட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் குட்டிகளுடன் யானை கூட்டம் வனப் பகுதிக்கு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/XOqpx_c3LPU

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe