சென்னையில் இருந்து கோவை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் குழந்தை மீட்பு…

published 4 months ago

சென்னையில் இருந்து கோவை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் குழந்தை மீட்பு…

கோவை: சென்னையில் இருந்து கோவை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் குழந்தை மீட்கப்பட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

சென்னையில் இருந்து நேற்று முன் தினம் இரவு 11.15 மணி அளவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையம் வந்தது. ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர். பின்னர் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயிலை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது ஒரு பெட்டியில் உள்ள சீட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காவலர்கள் கஜேந்திரன் மற்றும் ரம்யா ஆகியோர் குழந்தையை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை காணவில்லை என்று யாரும் புகார் அளிக்க வரவில்லை. 

குழந்தையை பெற்றோர் ரயிலில் தவறவிட்டு சென்றனர் அல்லது வேண்டுமென்றே போட்டுவிட்டு சென்றனர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இதனை எடுத்து போலீசார் அந்த குழந்தையின் பெற்றோரின் விவரத்தை அறிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவரை குழந்தையின் பாதுகாப்பு கருதி கிணத்துக்கடவில் உள்ள அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe