கோவையில் மாற்றுத்திறனாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்- விவரங்கள் இதோ...

published 4 months ago

கோவையில் மாற்றுத்திறனாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்- விவரங்கள் இதோ...

கோவை: வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்கள். மாற்றுத்திறனாளி நலஅலுவலகத்துடன் இணைந்து மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28.09.2024 அன்று கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணியளவில் நடத்தப்பட உள்ளது.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், கோயம்புத்துார் சுற்றுவட்டார பகுதியிலிருந்து உற்பத்திதுறை, ஜவுளித்துறை. இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டிதுறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கான பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எட்டாம்வகுப்பு, பத்தாம்வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. மேலும், அனுமதி முற்றிலும் இலவசம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSO3q6Y1d9BfVjfvcbHTwDl3C 6eG8e4Xs-0X6Rnam4EVqtCA/viewform?usp=sf link

என்ற இணையதளத்தில் இவ்வேலைவாய்ப்பு பதிவு செய்து முகாமிற்கு  விண்ணப்பித்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு வேலையளிப்போர் (Employer) 7845664918, 6381590373 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

இம்முகாமில் கலந்து கொள்ளவிரும்பும் அனைத்து மாற்றுத்திறனாளி
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம்(Bio-data) மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளுமாறு
தெரிவிக்கப்படுகிறது. இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு
பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம்
பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 0422-2642388, 9499055937 என்ற எண்ணில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை தொடர்பு
கொள்ளவும்.

இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் மனுதாரர்கள் அதிகஅளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe