வேளாண்மைப் பல்கலை.,யில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

published 2 years ago

வேளாண்மைப் பல்கலை.,யில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் "43-வது வருடாந்திரப் பட்டமளிப்பு விழாவிற்கு கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வரையிலான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ மாணவியர்களிடமிருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnau.ac.in மூலம் 25.04.2022 முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள இணைப்பு மூலம் ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணத்தை SBI collect (The Comptroller, TNAU, Coimbatore) மூலம் கணக்கில் செலுத்த வேண்டும்.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் ஜூன் மாதம் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்துசேர வேண்டும். மேலும் இதுசம்பந்தமான விவரங்கள் அறிய விரும்புவோர் 0422-6611506 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe