கோவையில் மூத்த குடிமக்களுக்கு தலைக்கவசம் வழங்கிய காவல் ஆணையாளர்…

published 4 months ago

கோவையில் மூத்த குடிமக்களுக்கு தலைக்கவசம் வழங்கிய காவல் ஆணையாளர்…

 

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோவை மாநகர காவல் துறை சார்பில், மூத்த குடிமக்களுக்கு 100 இலவச தலைக்கவசம் வழங்கும் விழா, கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், சிறுவர் போக்குவரத்து பூங்காவில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையரது அறிவுரைகளின் படி, ஊர் காவல்படையும், போக்குவரத்து கிழக்கு காவல் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மூத்த குடிமக்களுக்கு இலவச தலைக்கவசங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் தெற்கு துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார்,
போக்குவரத்து திட்டம் காவல் கூடுதல் துணை ஆணையர்  ரவிச்சந்திரன் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் A. சேகர், கோவை மாநகர ஊர்காவல்படை பிரதேச தளபதி C.S. விக்னேஷ்வர், வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர்  K. கோவிந்தராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்பதை காவல் துறையினர் அழுத்தமாக வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த குடிமக்கள், காவல்துறையினரின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினர். இந்நிகழ்வு, மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், காவல்துறையின் அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. இது போன்ற நிகழ்வுகள், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe