கோவையில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்...

published 4 weeks ago

கோவையில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்...

கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப்பதிவு விஷயமாக வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது  35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இது குறித்து கருப்புசாமி
லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கருப்பசாமியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். நேற்று மாலை 7 மணியளவில் 
அந்த பணத்தை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கி போது பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் 
சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் நான்கு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அதில் கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த அதிகாரிகள், வழக்கு பதிவு செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த மாதம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.5  லட்ச ரூபாய்  பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe