கோவை: எதிர்காலத்தில் பொறியியல் தேவை அதிகரிக்கும் என்று ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 22 ஆவது பட்டமளிப்பு விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) தலைவர் பேசியுள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீதாராம், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது;
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு (Generative AI) ஆகியவை இன்று உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நம் நாட்டில் மொத்த உயர்கல்வி பதிவு விகிதத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
உயர்கல்வியில் தேசிய மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் அதிக பங்களிப்பை அளித்து வருகிறது. வரும் நான்கு ஆண்டுகளுக்குள் முக்கிய பொறியியல் படிப்புகள் மாணவர்களால் விரும்பப்படும்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!