கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்றவர்கள் கைது...

published 3 weeks ago

கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்றவர்கள் கைது...

கோவை: திருச்சியைச் சேர்ந்த ஆயில் மில் ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் வேலுமணி. இதே மில்லில் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாம் என்பவர் பணி புரிந்து வருகிறார். 

இஸ்லாம் , மேற்பார்வையாளர் வேலுமணியிடம் தங்களிடம் அரை கிலோ எடையிலான தங்க கட்டி ஒன்று இருப்பதாகவும், மிக குறைவான விலைக்கு அந்த தங்க கட்டியை கொடுக்க தனது நண்பர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
 

இதனை அடுத்து வேலுமணி, தனது நண்பர் பாட்ஷா என்பவருடன் சேர்ந்து, இஸ்லாமின் நண்பர் சம்சத் யாசின் என்பவருன் போனில் பேசி உள்ளார்.  அப்பொழுது சம்சத் யாசின் தங்களிடம் தங்க கட்டி இருப்பதாகவும் அதை ஆறு லட்ச ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
 

இதனை அடுத்து 
வேலுமணியும், பாட்ஷாவும் பணத்துடன் கோவை தொண்டாமுத்தூர் வந்து சம்சத் யாசின் சொன்ன இடத்தில்  காத்து இருந்தனர். சம்சத் யாசின் வந்த பொழுது தங்களிடம் ஆறு லட்ச ரூபாய் பணம் இல்லை எனவும் இரண்டு லட்ச ரூபாய் தான் இருக்கிறது எனவும் தெரிவித்து உள்ளனர். 

இரண்டு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களிடம் இருந்த தங்கக் கட்டியை வேலுமணியிடம் கொடுத்த உடனேயே , சம்சத் யாசின், முகமது அலி மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று பேரும் ஓட்டம் பிடித்து உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வேலுமணியும் , பாட்ஷாவும் விரட்டிச் சென்று முகமது அலி மற்றும் இஸ்லாம் ஆகிய இருவரையும் பிடித்தனர். சம்சத் யாசின் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார். அவர்களிடம் விசாரித்த பொழுது அது தங்க கட்டி கிடையாது எனவும்,  காப்பரால் செய்யப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட காப்பர் கட்டி  என்பது தெரிய வந்தது. 

இதனை அடுத்து வேலுமணி இது தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலி தங்க கட்டி கொடுத்து மோசடி செய்ய முயன்ற இருவரை கைது செய்த போலீசார் , தலைமறைவாக உள்ள சம்சத் யாசின் என்பவரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe