இன்றும் விலை அதிகரித்து, இதுவரை இல்லாத, புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்...

published 3 weeks ago

இன்றும் விலை அதிகரித்து, இதுவரை இல்லாத, புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம்...

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதிரடியாக விலை சரிவைச் சந்தித்து வந்தன.

ஆனால், இந்த விலை குறைவு நீடிக்கவில்லை, குறைந்ததை விட பல மடங்கு வேகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிக்கத் தொடங்கியது.

இம்மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.7,050க்கும், ஒரு பவுன் ரூ.56,400க்கும் விற்பனையானது. தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

கடந்த 10ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது.

இன்று ஒரு பவுனுக்கு ரூ.360 விலை அதிகரித்துள்ளது. தற்போது 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,140க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கிராம் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,900க்கும், ஒரு பவுன் ரூ.47,000க்கும் விற்பனையாகிறது.

சர்ரென உயர்ந்து வந்த வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,0,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe