மதுக்கரை பகுதியில் 300கிலோவிற்கு மேல் புகையிலை பறிமுதல்...

published 3 weeks ago

மதுக்கரை பகுதியில் 300கிலோவிற்கு மேல் புகையிலை பறிமுதல்...

கோவை: கோவை, மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுக்கரை காவல் நிலைய காவ‌ல் துறை‌யின‌ர் சம்பவம் இடமான சீராபாளையம் மற்றும் திருமலையாம் பாளையம்  அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்து இருந்த சீராபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 209 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்தனர். 

இதே போல்  திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நூர்முஹம்மத் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து மேற்படி 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  என மொத்தம் சுமார் 329 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe