சிங்காநல்லூரில் பைக்குக்குள் நுழைந்த நாகப்பாம்பு- மீட்ட வீடியோ உள்ளே...

published 2 weeks ago

சிங்காநல்லூரில் பைக்குக்குள் நுழைந்த நாகப்பாம்பு- மீட்ட வீடியோ உள்ளே...

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் புகுந்த நாகப் பாம்பை, பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார்.

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் 1.5 அடி நீளம் உள்ள நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாம்பு பிடி வீரரான ஸ்னேக் அமீன் என்பவரை அழைத்தனர். 

அங்கு வந்த ஸ்னேக் அமீன் இரு சக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் சிக்கியிருந்த பாம்பை பத்திரமாக வெளியே எடுத்து உயிருடன் மீட்டார். பின்னர் அதனை தண்ணீர் பாட்டிலுக்குள் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். 

மேலும் அங்கிருந்த மக்களிடம் பேசிய ஸ்நேக் அமீன் குடியிருப்பு பகுதியில் தேவையற்ற குப்பைகளை சேர்க்க வேண்டாம், புதர் மண்டிய பகுதிகளை அகற்ற வேண்டும்.  குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் தென்பட்டால் அதனை அடித்துக் கொல்லக்கூடாது தீயணைப்புத் துறையினர் அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/M366EmmJSsw

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe