கோவையில் சொத்துவரிக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்

published 2 years ago

கோவையில் சொத்துவரிக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வை கைவிட வேண்டி மார்க்ஸிஸ் கம்யூனிட் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வரும் சூழலில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மாநகராட்சியில் 60 சதவீத சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும், இதர உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்களை குறைக்க வேண்டும், மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், தனியார் நிறுவனத்திற்கு விடப்பட்ட குடிநீர் வினியோக உரிமையை ரத்து செய்ய வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை  விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe