சேமிக்க விரும்புகிறீர்களா? : சிறு சேமிப்புகளுக்கு ஏற்ற முறையான முதலீட்டுத் திட்டங்கள் என்னென்ன?

published 2 years ago

சேமிக்க விரும்புகிறீர்களா? : சிறு சேமிப்புகளுக்கு ஏற்ற முறையான முதலீட்டுத் திட்டங்கள் என்னென்ன?

முறையான முதலீட்டுத் திட்டம் (SIP), வழக்கமான மற்றும் முறையான முறையில் பரஸ்பர நிதிகளில் (mutual funds) முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாகும். SIP என்பது தொடர்ந்து முதலீடு செய்வதாகும். சிறிய தொகையை களை தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலமாக, உங்களுக்கு வருங்காலத்தில் கணிசமான ஒரு தொகையை சேமிக்க இத்தகைய திட்டம் உதவும். 

SIP- திட்டங்களின் கீழ் ஒருவரின் வசதிக்கேற்ப ஒவ்வொரு காலாண்டு, மாதம் அல்லது வாரம் ஆகிய இடைவெளிகளில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்யத் தொடங்குவதற்கு முன், SIP எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். 

SIP-ஆனது தொடர்ச்சியான வங்கி வைப்புத்தொகையைப் போலவே காலமுறை மற்றும் நிலையான முதலீடுகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் மூலமாக உங்கள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் நிர்ணயித்துள்ள கால அவகாசங்களில் தானாக பணம் சேமிப்பு கணக்கிற்கு செல்லும்.

மேலும் அதனுடன் தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் உங்களுக்கு ஒதுக்கப்படும்.  பெறப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை திட்டத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பை (NAV) சார்ந்து மாறுபடும்.

அதாவது ஒருவர் 5 ஆண்டுகளுக்கு, மாதம் ஒரு முறை ரூ. 2000 சேமிக்க திட்டமிட்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து. 2000 கழிக்கப்பட்டு அவரின் SIP கணக்கில் பங்குகளை வாங்க உபயோகிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள SIP திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு ஒரு அலகிற்கு ரூ. 50-ஆக இருப்பின்,  அந்த நபரின் SIP கணக்கில் அது 40 அலகுகளாக கணக்கில் சேர்க்கப்படும். 5 ஆண்டு காலம் நிறைவடையும் பொழுது, ஒருவரின் SIP கணக்கில் சேர்ந்துள்ள அலகுகளுக்கு ஏற்ப அந்த தேதியிலுள்ள நிகர சொத்து மதிப்பின் படி சேமிப்புத் தொகை அளிக்கப்படும். 

அதாவது, 5 ஆண்டுகளின் முடிவில் 2,500 அலகுகள் அவரின் கணக்கில் இருந்து, ஒரு அலகின் நிகர சொத்து மதிப்பு ரூ. 50-ஆக இருப்பின், முதலீட்டாளருக்குக் கிடைக்கும் செல்வத்தின் மதிப்பு 2,500 x 50 என ரூ. 1, 25, 000 ஆக இருக்கும்.

சந்தை நிலவரப்படியும் அந்நிறுவனத்தின் பொருளாதார நிலை பொருத்தும் பங்குகளின் நிகர சொத்து மதிப்பு வேறுபடும். SEBI பதிவுசெய்யப்பட்ட பரஸ்பர நிதிகள் வழங்கும் SIP-யில் முதலீடுகள் தொழில்முறை நிதி மேலாளர்களின் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன, அதற்காக அந்தந்த திட்டத்தின் திட்டத் தகவல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பெயரளவு செலவை செலுத்த வேண்டும். 

வங்கிகளின் மொத்தத் தொகை முதலீட்டுடன் (fixed deposit) ஒப்பிடும்போது SIP மூலம் முதலீடு செய்வது பல நன்மைகளை வழங்குகிறது. ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப  SIP-யிற்கு பணம் செலுத்தும் தேதியை நிர்ணயம் செய்யலாம் என்பதால்  சம்பளத் தேதியைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்பது கூடுதல் ப்ளஸ்.

SIP-யின் நன்மைகள்

குறைந்த நுழைவு நிலை: SIP முதலீடுகளைச் செய்ய பெரிய தொகையை ஒருவர் குவிக்க வேண்டியதில்லை. நிலையான இடைவெளியில், ரூ. 500 முதல் தொகைகளை முதலீடு செய்யலாம்.

சந்தையின் தற்போதைய நிலையைக் கணக்கிடுவது அவசியமில்லை: SIP மூலம் தொடர்ந்து முதலீடு செய்வதால், சந்தை ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது மற்றும் சந்தையின் தற்போதைய நிலையைக் கணக்கிடும் தேவையை நீக்குகிறது. SIP திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது, ஒரு மாதம் சந்தை நிலவரம் மோசமாக  இருந்தாலும், பின் வரும் மாதங்களில் சந்தை நிலவரம் கூடும் பொழுது, இந்த இழப்பு சமன் செய்யப்படும்.

ரூபாய் செலவு சராசரி:

குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்வதால், சந்தை குறைவாக இருக்கும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்டின் அதிக யூனிட்களையும், அதிகமாக இருக்கும் போது குறைவான யூனிட்களையும் பெறுவீர்கள். இதனால் நாம் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ற சராசரியை பாதுகாக்க முடியும்.  

கூட்டும் சக்தி: 

SIP மூலம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதால், கூட்டுத்தொகையின் பலனையும் பெறமுடியும். அதாவது நாம் செலுத்தும் பணத்தின் வட்டி காம்பவுண்ட் இன்டெரெஸ்ட் முறைப்படி கணக்கிடப்படுகிறது. காம்பவுண்ட் இன்டெரெஸ்ட் முறைப்படி கணக்கிடும்பொழுது முந்தைய மாதங்களில் ஈட்டப்பட்ட வட்டித் தொகையும் அசல் தொகையில் சேர்க்கப்பட்டு, அடுத்த மாதத்திற்கான வட்டி புதிய அசல் தொகையின் மீது வழங்கப்படும்.

SIP-யின் வகைகள்

டாப்-அப் எஸ்ஐபி: ஒருவர் தனது தொழிலில் முன்னேறி, அதிக வருமானம் ஈட்டத் தொடங்கும் போது, SIP முதலீடுகளை அதிகரிக்க டாப்-அப் எஸ்ஐபி வசதியைப் பயன்படுத்தலாம். டாப்-அப் எஸ்ஐபியின் கீழ் ஏற்கனவே இருக்கும் SIP தொகையை அவ்வப்போது அதிகரிக்கலாம் (உதாரணமாக, ஒவ்வொரு 6 மாதங்களுக்குப் பிறகும் உங்கள் தற்போதைய SIP ரூ.1,000-த்தை ரூ.500 சேர்த்து ரூ. 1,500- ஆக அதிகரிக்கலாம்).

நிரந்தர SIP:

நிரந்தர SIP-யைத் தொடங்கும் நேரத்தில் செலுத்தப்படும் SIP-யின் இறுதித் தேதி வரையறுக்கப்படுவதில்லை.  ஒருவர் செலுத்தும் தவணைகளை நிறுத்துவதற்குக் குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்காத வரையில், நிர்ணயித்த காலமுறைப்படி தவணைகள் தொடர்ந்து முதலீடு செய்யப்படும்.

வேறுபடும் SIP: 

உங்கள் பணப்புழக்கத்திற்கு ஏற்ப அவ்வப்போது முதலீட்டுத் தொகையை அதிகரிக்க அல்லது குறைக்க நிலையற்ற SIP-க்கள் உதவும். ஒரு நிலையற்ற SIP-யைத் தொடங்கும்போது நிலையான முதலீட்டுத் தொகை குறிப்பிடப்பட்டிருந்தாலும், தவணைத் தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பு முதலீட்டுத் தொகையை மாற்றுவதற்கான வசதி உள்ளது. ஆன்லைனில் SIP-யைத் தொடக்கினால் இதனை கையாளுவது எளிதாக இருக்கும்.

இயக்கப்பட்ட SIP: 

அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் இயக்கப்படுத்துதல் மூலம் SIP-யைத் தேர்வு செய்யலாம். அதாவது, சந்தை நிலையற்றதாக இருந்தால், தானாகவே ஒருவர் முதலீடு செய்யும் தொகை ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறுவதற்கான இயக்கத்தை முன்கூட்டியே இயக்கி அமைக்க முடியும்.  

வழக்கமான முதலீடுகளுடன் செல்வத்தை உருவாக்க முதலீட்டாளர்களின் கருத்தில்  SIP ஒரு சிறந்த கருவியாகும். மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் SIP-க்கள் செலவழிப்பதற்கு முன் சேமிக்க விரும்பும் மற்றும் ஒழுக்கமான முதலீட்டாளர்களாக மாற விரும்பும் தனிநபர்களுக்கு ஏற்ற ஏற்றது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe