கோவையில் இரண்டு நாள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர்...

published 2 days ago

கோவையில் இரண்டு நாள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர்...

கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தமிழக முதலமைச்சர முக ஸ்டாலின் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக எல்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நில எடுப்பு விடுப்பு ஆணைகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து நேற்று மாலை கெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார் பின்னர் பொள்ளாச்சி சாலை குறிச்சி தொழில் பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டார். பின்னர் போத்தனூர் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.

தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று செம்மொழிப் பூங்காவை பார்வையிட்ட பின்னர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 
தொடர்ந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் சென்னை புறப்பட்டார்.

சென்னை புறப்படும் பொழுது கோவை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்து இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe