தான் படித்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கோவை கவுன்சிலர்...

published 3 weeks ago

தான் படித்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கோவை கவுன்சிலர்...

கோவை: கோவையில் அரசு பள்ளியில் பயின்ற முன்னால் மாணவரும் கவுன்சிலருமான இளைஞர் ஒருவர் 
தான் பயின்ற அதே பள்ளியில் பயிலும் 1200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக் கு  தீபாவளி பரிசாக தனது சொந்த செலவில் பட்டாசு மற்றும் புத்தாடைகளை கொடுத்து  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்.இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் பயின்று தற்போது தாளியூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக இருக்கிறார்.தனது சிறு வயதில் மிகவும் கஷ்டபட்ட இவர் பல்வேறு சமூக சேவை பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் கவுன்சிலர் பொன்ராஜ் தீபாவளியை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவது வழக்கம்.இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 1200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும்  கவுன்சிலர் பொன்ராஜ் பட்டாசு கிப்ட்பாக்ஸ்,புத்தாடைகள் கொடுத்து அசத்தினார். இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கவுன்சிலர் பொன்ராஜ் கூறுகையில் தான் அரசு பள்ளியில் பயிலும் போது உடுத்துவதற்கு சரியான உடை என்பது இல்லை.அப்போது உதவி செய்வதற்கும் யாரும் இல்லை.அதே போல தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு வசதி இல்லை.இம்மாதிரியான கஷ்டத்தை தற்போது உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அனுபவிக்க கூடாது என்பதற்காக தான் அறக்கட்டளையை துவங்கி சேவைகளை செய்து வருவதாகவும் அடுத்த வருடம் 3ஆயிரம் மாணவர்களுக்கு பட்டாசுகள் வழங்குவேன் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe