திமுக உறுப்பினருக்கு அளிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லையா?- கோவையில் அரசு முத்திரையை வாடைக்கு கேட்கும் வாழும் கலைகள் அமைப்பினர்...

published 1 week ago

திமுக உறுப்பினருக்கு அளிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லையா?- கோவையில் அரசு முத்திரையை வாடைக்கு கேட்கும் வாழும் கலைகள் அமைப்பினர்...

கோவை: கோவையை சேர்ந்த வாழும் கலைகள் அமைப்பினர் இருகூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை திமுக உறுப்பினர் போலியாக ஆவணங்களையும் முத்திரைகளையும் தயாரித்து மோசடி செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் இருகூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை  திமுகவை சேர்ந்த உதயநிதி என்பவர் ஆக்கிரமித்து அரசாங்கத்தின் போலி முத்திரை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்து 50 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மோசடி செய்த நிலத்தின் மீது வருவாய்த் துறையின் பட்டாவும், பத்திரப்பதிவு துறையின் பத்திரமும் இல்லாமல் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் 50 லட்சம் ரூபாயை திமுக உறுப்பினர் பெற்றுள்ளதாகவும்
இதில் அரசு அதிகாரிகளின் தலையீடு ஏதேனும் உள்ளதா அல்லது அவரே போலியாக ஆவணங்களை தயாரித்து விட்டாரா என்று விசாரணை மேற்கொண்டு  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

திமுக உறுப்பினரே போலி பத்திரங்கள் தயாரிக்கும் அளவிற்கு சாத்தியங்கள் இருந்தால் மக்களுக்கு சேவை செய்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கு அரசு முத்திரைகளை ஒரு வருடத்திற்கு வாடகைக்குத் தாருங்கள் இல்லையெனில் அந்த முத்திரைகளை நாங்களே தயாரித்துக் கொள்வதற்கு அனுமதி தாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe